India
“பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறிவைத்து வியூகம் அமைத்துள்ளோம்” - பிரியங்கா காந்தி
மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறன.
இதனையடுத்து, வருகிற மே 19ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது.
அதன் பிறகு, ,மே 23 அன்று நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ள அமேதி தொகுதியில் உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல்காந்திக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த முறை ஆட்சிக்கு வந்த பா.ஜ.கவின் எண்ணம் இந்த முறை பலிக்காது என்றும், நிச்சயம் உ.பி. மாநிலத்தில் பாஜக பெரும் தோல்வியையே சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறைக்கும் வகையில் திட்டமிட்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ”காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் வெற்றி நிச்சயம். மற்ற இடங்களில், பா.ஜ.கவின் வாக்கு வங்கியை குறைக்கும் வகையில் வியூகம் வகுத்துள்ளோம். கடந்த தேர்தல் போல் அல்லாமல், இம்முறை தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பலத்த அடியைக் கொடுக்கும்” என்றார்.
முன்னதாக, அமேதி தொகுதிக்கு பிரசாரத்துக்காக வந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?