India
வராத புயலுக்கு 309 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.. ‘கஜா’ புயலுக்கு எங்கே?
சென்னைக்கு தென் மேற்கே 575 கி.மீ தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளது. இது நாளை (மே 1) மாலை வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வடகிழக்கில் உள்ள ஒடிசாவை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஃபானி புயலை முன்னிட்டு தேசிய பேரிடர் மேலான்மை பரிந்துரையின் பேரில் 4 மாநிலங்களுக்கு முன் உதவித்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதாவது தமிழகத்துக்கு ரூ.309 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடியும் முன் உதவித்தொகையாக வழங்க உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடியது. கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்விடம், விவசாய நிலங்கள், தென்னை, பனை, மா என பல மரங்கள் நாசமாகின. இதனை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் கேட்டு அறிக்கை சமர்பித்து, இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் மாத இறுதியில் கேட்ட நிதியில் இருந்து வெறும் 1,146 கோடி மட்டுமே மத்திய அரசு அளித்தது. இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இன்றளவும் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் குறையாத நிலையில், தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் தமிழகத்தை பாதிக்காது என வானிலை மையம் தெரிவித்திருந்த போதிலும், முன் உதவித் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் மோடி அரசு தந்திரமாக ஈடுபடுகிறது என விவசாயிகள் காட்டமாகவும், வேதனையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!