4th phase loksabha elections
India

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் - 3 மணிவரை 50% வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 50% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதுமுள்ள 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 13, மேற்குவங்கத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, ஒடிசாவில் 6, பீகாரில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

72 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 543 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 45 தொகுதிகளைக் கைப்பற்றியது.

Polling percentage

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை இழந்து பா.ஜ.க சறுக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 49.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 66% வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 8.42% வாக்குகளும் பதிவாகியுள்ளன.