India
ராகுல் காந்தியின் வேட்பு மனு அமேதியில் ஏற்பு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் இந்த முறையும் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுகிறார். மே 6ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்.,20 அன்று நடைபெற்றது. அதில் ராகுல் காந்தியிம் குடியுரிமை குறித்து சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் குழப்பம் ஏற்படுத்தினர். அதனால், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்று அமேதி தொகுதிக்கான ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இதற்கிடையில், அமேதி தொகுதி மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாடு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.,23) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!