India
நீதிமன்றத்தின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இருக்கிறது - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் ரீதியான புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசியதாவது:
என்னை பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டைக் கண்டுபடித்து என் மீது சுமத்துகிறார்கள். இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய சதி இருக்கிறது. மிகப்பெரிய சக்தி பணியாற்றுகிறது. நீதித்துறையின் செயல்பாட்டை குலைக்க சதி நடக்கிறது.
நான் ஏற்கனவே பல கூட்டங்களில் கூறியதைப் போன்று, நீதிபதிகள் இதுபோன்ற பணிச்சூழலின் கீழ் பணியாற்றினால் நிச்சயம் எதிர்காலத்தில் எந்த நல்ல மனிதரும், புத்திசாலியானவரும் நீதிபதி பொறுப்பே ஏற்க வரமாட்டார்கள். என்னிடம் பணியாற்றும் ப்யூன் கூட என்னைக் காட்டிலும் அதிகமாக பணம் வைத்துள்ளார்.
என் மீது குற்றச்சாட்டு கூறிய பெண் கிரிமினல் பின்புலம் கொண்டவர். அவர் மீது ஏற்கனவே இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவர் பணிக்கு வந்தபோது, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. முதல் தகவல் அறிக்கை நிலுவையில் இருக்கும்போது, எப்படி அவர் உச்ச நீதிமன்ற பணியில் இருக்க முடியும். மூன்றாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோதுதான் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
பிணையில் வெளியே வந்த அந்த பெண் புகார் அளித்தவர்களை மிரட்டி, விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். அந்த பெண்ணின் கிரிமினல் பின்புலத்தால், அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார். ஒழுக்கமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுங்கள் என்று போலீஸார் இருமுறை எச்சரித்தும் அந்த பெண்ணை அனுப்பினார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், எந்த நீதிபதியும் வழக்கை முடிவு செய்யமாட்டார்கள். நானும் இந்த வழக்கில் முடிவு எடுக்க மாட்டேன், ஒதுங்கிக்கொள்கிறேன். வழக்கம் போல் நீதிமன்றத்துக்கு வந்து வழக்கை ஒத்திவைத்துவிட்டுச் செல்வேன்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியிலான தலைமை நீதிபதி இடத்தில் இருந்து மிகவும் வேதனையுடன் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தின் சுதந்திரம் மிக, மிக தீவிரமான அச்சுறுத்தலில் இருக்கிறது. இது மிகவும் துயரான சூழல்.
இவ்வாறு தலைமை நீதிபதி கோகய் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?