DMK Government
”நல்லகண்ணு பிறந்தநாள் முதல் வார் ரூம் ஆய்வு வரை” : ஞாயிறன்றும் ஓய்வின்றி சுழலும் மக்கள் முதலமைச்சர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.நாவலர் டாக்டர் இரா. நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழா
நாவலர் டாக்டர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் நடைபெற்றது. அதனை தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாவலின் சிலையை திறந்து வைத்து சிறப்பித்தார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒமைக்ரான் வகை கொரோனா சிகிச்சை வார்டை தொடங்கி வைத்து அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இருந்தனர்.
ஒமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்தில் (war room) பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது முதலமைச்சரிடம் வார் ரூமின் செயல்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விவரித்தார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு