DMK Government

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் மண்ணைக் கவ்விய பொன்னார் : விஜய் வசந்த் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, பல கட்ட சுற்று முடிந்து தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆரம்பம் முதல் திமுக கூட்டணி நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த போட்டியிட்டுள்ளார். அதேபோல் அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

கடந்த முறை மறைந்த எம்.பி வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். அதன்படி விஜய் வசந்த் 298068 வாக்குகளும், பொன். ராதாகிருஷ்ணன் 298068 வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 117099 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வெற்றியை உறுதி செய்துள்ளார்.

Also Read: #LIVE | 165 இடங்களில் வென்று கோட்டையைக் கைப்பற்றியது தி.மு.க - வெற்றி வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்!