DMK Government
மேற்கு வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் மம்தா பானர்ஜி.. பின்னடைவை சந்திக்கும் பா.ஜ.க!
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
294 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3-வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக வாய்ப்பு உள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !