DMK Government
“எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெறும்” - வெற்றிக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, பல கட்ட சுற்றுகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆரம்பம் முதல் தி.மு.க கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க கூட்டணி 163 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 1,04,577 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரைவிட 70,580 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரிக்குச் சென்று பெற்ற பின்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செய்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர். எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம்.
அண்ணா, கலைஞர் பயிற்றுவித்த வழிநின்று மக்கள் கடமையாற்றுவோம். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முழுமையாக பணியாற்றுவோம்.
நாளை மறுநாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, அதன் பின்னர் ஆட்சியமைக்க உரிமை கோருவது உள்ளிட்ட விவகாரங்களை முடிவு செய்வோம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!