DMK Government

“தமிழகம், கேரளாவில் கருகிய தாமரை” : பா.ஜ.கவிற்கு செக் வைத்த தென் மாநிலங்கள் !

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. இதில் திமுக கூட்டணி 166 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளும் அ.தி.மு.க கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக 68 இடத்தில் மட்டுமே முன்னிலை உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிட இடங்களிலெல்லாம் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராகிறார். கேரளாவிலும் ஒரு இடத்தில் கூட வெற்றியடையவில்லை. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரிய அளவில் போராட்டம், கலவரம் என வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் போட்டுவைத்த திட்டம் வாக்கு எண்ணிக்கையின் போது சுக்குநூறாக உடைந்தது. அதேபோல் அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகவிருக்கிறார்.

இதனிடையே இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க பெரும் தோல்வியை சந்துள்ள நிலையை நெட்டிசன்கள் சமூகவலைத்தகளில் #RejectsBJP என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

வட மாநிலங்களில் மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க.,வால் தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து வேறு எங்கும் செல்வாக்குப் பெற முடியாதது அக்கட்சித் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: #LIVE | 165 இடங்களில் வென்று கோட்டையைக் கைப்பற்றியது தி.மு.க - வெற்றி வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்!