DMK Government
தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு.. 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் அதிகபட்ச வாக்குப்பதிவு! #Election
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 3-வது கட்ட வாக்குப்பதிவும், அசாமில் இறுதிகட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது. வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்ட வடிவில் அடையாளக்குறிகள் போடப்பட்டிருந்தன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அப்பகுதிகளில் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
சில வாக்குச்சாவடிகளில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பா.ஜ.க-விற்கு வாக்கு பதிவாகுவதாக குற்றம்சாட்டப்பட்டது. சில இடங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
6 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழு கவச உடையணிந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். 7 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இரவு 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78%, நாமக்கல்லில் 77.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 59.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!