DMK Government

“கூட்டத்துக்கு வந்தா ரூ.500னு சொன்னாங்க”: பணம் தராததால் பேசும்போதே கலைந்த மக்கள் - அசிங்கப்பட்ட பழனிசாமி!

குன்னூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்டம் சேர்ப்பதற்காக, ஆட்களுக்கு 500 ரூபாய் வழங்குவதாகக் கூறி அ.தி.மு.கவினர் அழைத்து வந்துள்ளனர். பணம் கொடுப்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியும், அ.தி.மு.கவினர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குன்னூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டம் சேர்ப்பதற்காக ஆளுங்கட்சியினர், ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதாகக் கூறி ஆட்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்தனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அ.தி.மு.கவினர் பணம் தராததால் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே பெண்கள் ஆண்கள் என பெரும்பாலானோர் வெளியேறினர்.

இதையறிந்த அ.தி.மு.க நகர ஒன்றிய செயலாளர்கள் அவசர அவசரமாக பிரச்சார மேடை அருகே அழைத்து வந்து ஆட்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் குன்னூர் அ.தி.மு.க வேட்பாளர் வினோத் மீது வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விஜயபாஸ்கர் வெற்றி பெற வாய்ப்பில்லை” : கருத்துக்கணிப்பு நடத்தியவர்களை தாக்கிய அ.தி.மு.க அடியாட்கள்!