DMK Government
நாட்டாமைக்கு டாட்டா காட்டிவிட்டு தி.மு.க-வில் இணைந்த ச.ம.க வேட்பாளர்!
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளி கிருஷ்ணன், தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை சந்தித்து தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிகள் தவிர, அ.ம.மு.க, ம.நீ.ம தலைமையிலான அணிகளும் போட்டியிடுகின்றன.
ம.நீ.ம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைப்பதே பெரும்பாடு என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் சரத்குமார், தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 தொகுதிகளில் 3 தொகுதிகளை திருப்பி அளித்துவிட்டதாகவும், 37 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ச.ம.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளி கிருஷ்ணன் நேற்று தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்து தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். மேலும், லால்குடி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலேயே மூன்றை திருப்பிக்கொடுத்த சரத்குமாரின் கட்சி வேட்பாளர் தி.மு.க-வில் இணைந்தது ம.நீ.ம கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !