DMK Government
10 ஆண்டுகளாக செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்யப் போகிறதா? - அ.தி.மு.கவைச் சாடிய உதயநிதி!
அ.தி.மு.க கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
திருவல்லிக்கேணி 116வது வட்டத்தில் உள்ள மாட்டாங்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னி அம்மன் கோவில் தெரு, பழனி அம்மன் கோவில் தெரு, பழைய கட்டை தொட்டி தெரு, புதிய கட்டை தொட்டி தெரு, சுங்குவார் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள மக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
நடந்து சென்று பொதுமக்களிடம் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கும் போது, அப்பகுதியில் உள்ள் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகம் பொங்க வரவேற்பு கொடுத்தனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுயில் அ.தி.மு.கவினர் வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளோம், நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
ஜெயலலிதா இரும்புப்பெண் என்கிறார்கள், மரணத்தை ஓபிஎஸ் கொச்சைப்படுத்துகிறார். சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆணையம் அமைத்து விசாரிப்பது அ.தி.மு.க தான், மூன்றாண்டுகளாகியும் உண்மை வெளிவராததால் தான் நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா இரும்புப்பெண் என பெருமையாக பேசுகின்றனர், திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக அவர் இறந்துவிட்டாரா என்ன?
அ.தி.மு.க கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி.
அ.தி.மு.கவின் சிஏஏ குறித்த அறிவிப்பை ஏற்க முடியாது என பா.ஜ.க மறுத்துவிட்டது. பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்ய போகிறது ? என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி செயலாளர், வட்ட செயலாளர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!