DMK Government
“தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் தலைவரே உங்கள் வேட்பாளர்” - கொளத்தூரில் தேர்தல் பரப்புரையைத் துவங்கிய வைகோ!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொளத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் தொகுதி தி.மு.க சார்பில், பேப்பர் மில்ஸ் சாலையில் அருகே நடைபெற்றது.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றொரு கதாநாயகன் அவர் அறிவித்திருக்கும் தேர்தல் அறிக்கை.
அ.தி.மு.க, முற்றிலுமாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிட்டுள்ளது. முதன்முதலில் பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்பை வழங்கியவர் கலைஞர் தான். பல்வேறு நல்ல அறிவிப்புகளை பெண்களுக்காக இந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க வெளியிட்டுள்ளது.” எனப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், “ஆட்சி மாற்றம் அவசியம் தேவை. மாநில உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் . வகுப்புவாத கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியலைக் கடந்து சாதி மதங்களை கடந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தொகுதியில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் .
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “எப்போதும் பரபரப்பாக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் மேற்கொண்டாலும், வாரம் ஒருமுறை தன் தொகுதிக்கு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. தொகுதி மக்களிடம் மிகுந்த நற்பெயரை பெற்றவர். அவர் உங்கள் தொகுதி மக்களால் மட்டும் சொந்தம் கொண்டாடப்படுபவர் அல்ல, தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் தலைவர்.
நாளைய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தனது 14 வயதில் இளைஞர் தி.மு.க-வை கையில் எடுத்துக்கொண்டு திருமணம் ஆன உடனே சிறைச்சாலை சென்றவர். மாநகராட்சி மேயரானபோது, 9 மேம்பாலங்கள் கட்டி சாதனை படைத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின். உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என அடிப்படையிலிருந்து உயர்ந்த பதவிகளை வகித்து நேர்த்தியாக நேர்மையாக வழிநடத்திச் சென்றவர்.
ஒன்றிணைவோம் வா, விடியலே நோக்கி ஸ்டாலினின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆகிய கூட்டங்களின் மூலமும், திருச்சி மாநாட்டில் 7 உறுதிமொழிகளை முன்வைத்தும் மக்களை நேரடியாகச் சென்று அவர்கள் குறைகளை பெற்று 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.” எனப் பேசினார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!