DMK Government
‘ஸ்டாலின்தான் வாராரு.. ’ : தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கும் 50 இயக்கங்கள் எவை எவை ?
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை கேள்வி எதுவும் கேட்காமல் ஆதரித்து வந்தது அ.தி.மு.க அரசு.
மத்திய - மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தி.மு.க வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராகியுள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அ.இ.ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.கவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முழு ஆதரவு அளிப்பதோடு, தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபடுவதாக பின்வரும் கட்சிகள் - இயக்கங்கள் - சங்கங்கள் உறுதி அளித்துள்ளன.
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் - இயக்கங்கள் - சங்கங்கள் பட்டியல் வருமாறு :-
1. ஆதித்தமிழர் கட்சி (நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன்)
2. தேசிய திராவிட கட்சி (நிறுவனத் தலைவர் இராசிபுரம் டி.கே.முருகேசன்)
3. இந்தியக் குடியரசுக் கட்சி (மாநிலத் தலைவர் முத்து முருகேசன்)
4. அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் (மாநில பொதுச்செயலாளர் செ.ரமேஷ்)
5. அகில இந்திய தலித் கிறிஸ்த்துவ மக்கள் இயக்கம் (மாநில பொதுச்செயலாளர் டி.அரசன்தாஸ்)
6. இந்திய குடியரசுக் கட்சி - ஆர்.வி (தலைவர் டாக்டர் ஆர்வெங்கடேசன்)
7. தமிழக மக்கள் நீதி கழகம் (நிறுவனர்/தலைவர் அ.சி.அகத்தியன்)
8. அருந்ததி கட்சி (மாநில தலைவர் ஆலூர் ஆர்.ராமமூர்த்தி)
9. பூர்வீக மக்கள் விடுதலை கட்சி, தலைமை களம் (நிறுவனத் தலைவர் ச.செல்லக்கண்ணு)
10. நமது தேசம் கட்சி (நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் என்.லட்சுமிபதி)
11. திராவிட தேசம் (நிறுவனர் - தலைவர் வி.கிருஷ்ணா ராவ்)
12. சமநீதிப்புலிகள் கட்சி (நிறுவனத் தலைவர் மு.ர.வெள்ளைப்பாண்டியன்)
13. இந்திய தேசிய லீக் (மாநில தலைவர் எம்.பஷீர்அகமது)
14. அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் (நிறுவனர்-தலைவர் பி.என்.அம்மாவாசி)
15. அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் (நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.எம்.மூர்த்தி தேவர்)
16. தேவர் மக்கள் இயக்கம் (நிறுவனர் - தலைவர் சங்கிலி பி.மாரிப்பாண்டியன்)
17. அகில இந்தி ய வீர வன்னியகுல சத்ரியர் பாதுகாப்பு சங்கம் (மாநில தலைவர் பா.ஜெய்ஹரி)
18. மாவீரன் வன்னியர் சங்கம் (நிறுவன தலைவர் வி.ஜி.கே.மணி)
19. தமிழ்நாடு வன்னியர் கிருத்துவர்கள் பேரவை (நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.ஜெசிந்தாமேரி)
20. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் (நிறுவனர்-பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன்)
21. சமூக சமத்துவ படை கட்சி (நிறுவனர் தலைவர் பி.சிவகாமி, இ.ஆ.ப.(ஓய்வு)
22. தமிழ்நாடு மக்கள் கட்சி (மதசார்பற்றது) (மாநில தலைவர் எஸ்.செல்வம்)
23. அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் (பொதுச்செயலாளர் விசு சிவகுமார்)
24. தமிழ்நாடு ஆய்வக நுட்புனர்கள் பேரவை (செயலாளர் வி.குமார்)
25. பெசன்டினரி செலிபிரேஷன்ஸ் (பொது ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.தம்பிவிஜயகுமார்)
26. மனிதநேய ஜனநாயக கட்சி (பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, எம்.எல்.ஏ)
27. தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் (நிறுவனர் தலைவர் ஜெ.ஜோதிகுமார்)
28. கோகுல மக்கள் கட்சி (நிறுவனர்-தலைவர் எம்.வி.சேகர்)
29. தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு
(மாநில பொதுச்செயலாளர் நாகா ஆர்.அரவிந்தன்)
30. தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் (மாநில செயலாளர் கு.நவீன்)
31. தமிழ்நாடு யாதவர் சங்கம் (மாநிலத் தலைவர் மு.சுந்தர்ராஜ் யாதவ்)
32. தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம் (மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.துரை உடையார்)
33. விஸ்வஜன முன்னேற்ற கழகம் (நிறுவனர் வி.வேல்முருகன்)
34. இளம் காளைகள் கட்சி (நிறுவனத் தலைவர் சி.நேதாஜி கார்த்திகேயன்)
35. தேசியவாத காங்கிரஸ் (தமிழ்நாடு மாநில தலைவர் ஜி.பி.சாரதி)
36. தமிழ்நாடு முக்குலத்தோர் தேவர் கட்சி (தலைவர் கணேஷ்பாண்டியர்)
37. தேனி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை (செயலாளர் டாக்டர் சிவமணி)
38. அனைத்து கிறிஸ்துவர்கள் பாதுகாப்பு நல சங்கம், சென்னை (நிறுவனர்/தலைவர் ஏ.கிதியோன்)
39. பெண்கள் சிந்தனையாளர் களம், சென்னை (தலைவர் மணிமேகலை)
40. தமிழ்ப்புலிகள் கட்சி (தலைவர் நாகை திருவள்ளுவன்)
41. தமிழ்நாடு ஓபிஆர் ரெட்டி நலச்சங்கம் (மாநில தலைவர் எம்.சுபாஷ்சந்திரபோஸ் ரெட்டி)
42. கிறித்தவத் தமிழர் கழகம்(பொதுச்செயலாளர் அ.ஆண்டனி ஆரோக்கியராஜா)
43. தமிழ்நாடு காமராஜர் மக்க ள் கட்சி (நிறுவனர்-மாநில தலைவர் இ.முத்துசாமி)
44. அகில பாரத சோழ ராஜ்ய கட்சி, வேளாளர் சங்கம், சோழிய வேளாளர் சங்கம் (நிறுவனர் அம்பிவெங்கடேசன்)
45. அனைத்து கருணீகர் முன்னேற்ற பேரவை (நிறுவனர்/தலைவர் கருணீகர் இளங்கோவன்)
46. தமிழக பசவர் முன்னேற்ற கழகம் (மாநில நிறுவனத் தலைவர் எம்.ஆர்.கந்தசுவாமி)
47. தமிழ்நாடு யாதவ மகாசபை (மாநில துணைத் தலைவர் ஏ.எஸ்.பழநியாதவ்)
48. தேசிய மக்கள் பேரியக்கம் (நிறுவனர்/தலைவர் நன்னிலம் செல்வா)
49. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (தமிழ்நாடு) (மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜார்ஜ்)
50. அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் (மாநில பொதுச்செயலாளர் டாக்டர் என்.ரவி(எ)தமிழரசன்)
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !