DMK Government
புதுச்சேரியில் அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க- பா.ஜ.க : சீட் பிரிப்பதில் நீடிக்கும் சிக்கல்!
கடந்த மாதம் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சதியால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒருபுறமும், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஒரு பக்கமும்,தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
இதனையெடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க முறையே தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்து பங்கீடு நிறைவுபெற்றது.
ஆனால் எதிர்தரப்பிலோ எஜமான் பா.ஜ.கவும் அடிமை அ.தி.மு.கவும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில், நீங்க எப்படியோ சண்டை போட்டுக்கோங்க நாங்க எங்க வேலைய பார்க்குறோம் என தங்களுக்கான 16 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் பெற்றுக் கொண்டது என்.ஆர்.காங்கிரஸ்.
சமீபத்தில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பா.ஜகவும், அ.தி.மு.கவும் போட்டியிடும் என்று அறிவித்து ரங்கசாமியும், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, அ.தி.மு.க இடையே தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியிருக்கிறது. ஆனால், கூடுதல் தொகுதிகள் கேட்டு புதுச்சேரி அ.தி.மு.கவினர் அடம் பிடிக்கின்றனர். தமிழக அ.தி.மு.க தலைமையோ பா.ஜ.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறதாம். இதனால், புதுச்சேரி அ.தி.மு.கவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- நிதர்சன் உதயா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!