DMK Government
தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவை கைவிட்ட ம.ம.க... 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ளது தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தாங்கள் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும், பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா, மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 இடங்களில் 15 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 188 தொகுதிகளில் உதயசூரியன் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!