DMK Government
தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு... உற்சாக முழக்கமிட்டு தொண்டர்கள் கொண்டாட்டம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இந்நிலையில், இன்று காலை, கோபாலபுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு முன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலுடன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் பட்டியலுடன் அண்ணா அறிவாலயம் வந்தபோது, அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்காக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் 'வெற்றி நமதே... நாளை நமதே' என உற்சாகமாக முழக்கமிளிட்டனர்.
பிறகு, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ,வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அண்ணா அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும், தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?