DMK Government
விலகியது தேமுதிக.. உறுதியானது அதிமுக தோல்வி - டெபாசிட் இழக்கும் என சுதீஷ் பேட்டி #ElectionBreaking
எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு அறிக்கை தயாரிப்பு, பிரசாரங்கள் என தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இப்படி இருக்கையில் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒரு புறம் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம் இடையே கருத்து மோதல் நிலையில் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு கேட்கும் தொகுதிகளை கொடுக்காமல் அலைக்கழிக்கும் செயல்களிலும் அதிமுக ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில் தே.மு.தி.க மாவாட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றதை அடுத்து அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தங்கள் சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும் தொகுதியையும் ஒதுக்க மறுத்ததால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: "அடிமைஸ்... ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்” - மின்னல் வேகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்!
இது தொடர்பாக பேசியுள்ள அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றும், அதிமுகவை தோற்கடிக்க தேமுதிக பணியாற்றும் என்றும் கூறியுள்ளார்.
சொந்த கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்காத அதிமுக கட்டாயம் தேர்தலில் தோல்வியுறுவது அறிவிக்கப்படாத ஒன்றாகிவிட்டது என தேமுதிகவினர் கூறியிருக்கிறார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!