DMK Government
“அந்தப்பக்கம் கூட்டணி பேசுவோம்; இந்தப் பக்கம் அசிங்கப்படுத்துவோம்” : தே.மு.தி.கவால் மனம் நொந்த எடப்பாடி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் நாளுக்கு நாள் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
அ.தி.மு.க அமைச்சர்கள் தே.மு.தி.க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார்.
மேலும் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய சுதீஷ், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக அ.தி.மு.கதான் எங்களைக் கெஞ்சுகிறது; நாங்கள் அவர்களைக் கெஞ்சவில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இல்லை என்றால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது.” என வீம்பாகப் பேசியிருந்தார்.
இப்படி இருக்கையில், கேட்ட இடங்களை அ.தி.மு.க தராததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தே.மு.தி.க இன்று அறிவித்திருக்கிறது. அதுபோக எடப்பாடி பழனிசாமி நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டார். ஆகவே தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் கூட பெறாது. அ.தி.மு.கவை தோற்கடிக்க தே.மு.தி.க பணியாற்றும் என சுதீஷ் கூறியுள்ளார்.
மேலும் சொந்தக் கட்சியிலும், கூட்டணியிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்காத அ.தி.மு.க கட்டாயம் தேர்தலில் தோல்வியுறுவது அறிவிக்கப்படாத முடிவாகிவிட்டது என தே.மு.தி.கவினர் கூறி வருகிறார்.
இதற்கிடையே எடப்பாடி தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமியால் கூட வெல்ல முடியாது என ஆத்தூர் பகுதியில் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர் ஆவேசமாக பேசியிருக்கிறார். இதுபோன்று மாறி மாறி மனம் போன போக்கில் தே.மு.தி.கவினர் பேசி வருகின்றனர். உட்கட்சி விவகாரத்தையே என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அ.தி.மு.க தலைமை தற்போது தே.மு.தி.கவின் பேச்சால் விழிபிதுங்கி போய் கிடக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!