DMK Government
பா.ஜ.கவை பார்த்து மிரளும் என்.ஆர்.காங்கிரஸ்.. மிரட்டும் டெல்லி : தகிக்கும் புதுச்சேரி கூட்டணி அரசியல்!
புதுச்சேரியில், பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. தன்னை முதலமைச்சராக அறிவிக்காததால், கொதிப்படைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பா.ஜ.க கூட்டணியை விட்டு விலகி, தனித்துப் போட்டியிடப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, பா.ஜ.க - அ.தி.மு.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த அணியின் சார்பாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க மேலிடம் இதனை தவிர்க்கும் விதமாக, புதிதாக பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை மூலமாக குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழி ஏற்படுத்தியது. இதனையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்தச் சூழலில், கடந்த 26ந் தேதி புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கிய நிலையில், கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை வேட்பாளர் ஆசை காட்டி, தங்கள் முகாமிற்கு இழுத்துச் சென்றது பா.ஜ.க.
இதனால் அதிர்ச்சியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.கவை கழட்டிவிட்டுவிட்டு தனித்துப்போட்டியிடுவது என முடிவு செய்து அதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுவந்தார்.
ரங்கசாமியின் இத்தகைய முடிவால் அதிர்ந்து போன பா.ஜ.க டெல்லி தலைமை, ரங்கசாமியை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இவ்வாறாக நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் ரங்கசாமி உடன்படாததால், மிரட்டும் பானியை பா.ஜ.க தற்போது கையில் எடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரங்கசாமியை வீடியோ காலில் தொடர்புக்கொண்ட அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு பா.ஜ.க அழைத்துள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையை தற்போது நடத்தி வருகிறார். ஆனாலும் தற்போது வரை ரங்கசாமி எந்த முடிவும் எடுக்காததால், நெருக்கடியில் உள்ள பா.ஜ.க தனது அடுத்தகட்ட மிரட்டல் வேலையைத் தொடங்கியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !