DMK Government
புதுக்கோட்டையில் தாமரைக்கு வாக்கு கேட்கும் பாஜக : தொகுதி ஒதுக்குவதற்கு முன்பே குழப்பம்- அதிமுக அதிருப்தி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க-வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
இதையடுத்து, அ.தி.மு.கவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள் என கூறி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை வெளியேறியுள்ளது. இப்படி அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்குத் தொகுதி பங்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று முடிவு செய்யப்படாத நிலையில், பா.ஜ.கவினர் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.கவினர் தீவிர வாக்கு சேரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பா.ஜ.கவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், புதுக்கோட்டை ஒன்றியங்களில், பா.ஜ.கவினர் வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்துக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல பழனி தொகுதியிலும் சுவர் விளம்பரங்கள் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் பா.ஜ.கவினர். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே பா.ஜ.க.வினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருவது அ.தி.மு.கவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!