DMK Government
நீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம், வேட்டி ,சேலை, தட்டு போன்ற பொருட்களை நீலகிரியில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் கிராமம் கிராமமாக கால்நடை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கு 20 கோழிக்குஞ்சுகளை இலவசமாக கால்நடைத்துறை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, மாயார் , பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் ,தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆளும் கட்சியினரை வைத்து வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடுதோறும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு முபாரக் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?
-
திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!