DMK Government
"அடிமைஸ்... ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்” - மின்னல் வேகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்!
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என முன்னணி கட்சிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அ.தி.மு.கதான் எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சுகிறது என தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷ் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க அ.ம.மு.க-வை கூட்டணியில் சேர்க்க நிர்ப்பந்தித்து வருகிறது. கூட்டணி பற்றிய முடிவை பா.ஜ.க தான் எடுக்கும் சூழல் அக்கூட்டணியில் உருவாகியுள்ளது. அ.தி.மு.க-வை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பா.ஜ.கவே அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலையும் நிர்ணயம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், அதற்கு வழிகோலும் சம்பவங்களே தற்போது நிகழ்ந்து வருகின்றன.
அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 8,250 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரையும் ஒரே நாளில் வரச் சொல்லி “வணக்கம்” கூறி அனுப்பியுள்ளது அ.தி.மு.க தலைமை.
மாவட்டவாரியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஒரே சமயத்தில் உள்ளே அழைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர், அனைவரையும் கூட்டம் கூட்டமாக வெளியே அனுப்பியுள்ளனர்.
நேர்காணலுக்கு வந்தவர்களிடம், “ஒவ்வொரு தொகுதியிலேயும் 15க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். ஆனால், ஒருவருக்குத்தான் வாய்ப்பு அளிக்க முடியும். அனைவரும் தேர்தல் ஒன்றிணைந்து பணியாற்ற வெண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மொத்த தொகுதிகளுக்குமான வேட்பாளர் நேர்காணலை ஒரே நாளில் ஏதோ கடமைக்கு நடத்தி முடித்துள்ளது அ.தி.மு.க. இதனால் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து நேர்காணலுக்கு வந்த விருப்ப மனு அளித்தவர்களை தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்யாமல், ஆயிரக்கணக்கானோரை ஒரே நாளில் வரவழைத்து, விசாரிக்கக்கூட செய்யாமல் அவமதித்திருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைக்கும், அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துவிட்டு, கடமைக்கு விருப்ப மனு விநியோகித்து, ஒப்புக்கு நேர்காணல் நடத்தியிருப்பதாக நிர்வாகிகள் கொதித்துப் போயுள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!