DMK Government
நீலகிரியில் தொடரும் பட்டுவாடா: அதிமுக நிர்வாகி வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள் பறிமுதல்!
நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.கவினர் தொடர்ந்து வீடு வீடாக 500 ரூபாய் பணம், ஒரு தட்டு, வேட்டி சேலை விநியோகம் செய்து வருகிறார்கள்
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில் தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில் 500 ரூபாய் பணம், ஒரு தட்டு, வேட்டி சேலை ஆகியவற்றை மாவட்டம் முழுவதும் பதுக்கி வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஞ்சூர் பகுதியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் வசந்த ராஜ் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தட்டு, வேட்டி, சேலை ஆகியவற்றை கையும் களவுமாக பிடித்த காவல்துறை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அப்போது ஆளும் கட்சி சேர்ந்த ஒன்றிய செயலாளர், தான் ஆளும் கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரிகள் முன்பு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே உதகை நகரிலுள்ள காந்தல் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் வீடு வீடாக தட்டு, வேட்டி சேலை தலா 500 ரூபாயை அ.தி.மு.கவினர் விநியோகம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !