DMK Government
வாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன்? - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன?
தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவுறும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இதில், தமிழகத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகின்ற மே 24ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படைகள் பணியில் அமர்த்தப்படும்.
தமிழகத் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தேவேந்திர குமார் நியமிக்கப்படுகிறார். தமிழகத்துக்கு செலவினப் பார்வையாளர்களாக மதுமகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே அதிக கால இடைவெளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல இடங்களில், வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், புதுசேரி போன்ற மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு, மற்றும் பல்வேறு குளறுபடிகள் மத்தியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் பிரச்சாரம் போன்ற எந்த உத்தியையும் மேற்கொள்ளவிடாமல் அவசரகதியில் தேர்தலை தற்போது நடத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் 26 நாட்கள் கால இடைவெளி இருப்பது, ஆளுங்கட்சியினரின் தேர்தல் மோசடிகளுக்கு உதவக்கூடும் என மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையேயான கால இடைவெளி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!