Election 2024

அதே டெய்லர், அதே வாடகை... பாஜகவுக்கு சாதகமாக ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்கள் !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை கவர்ந்தனர். மேலும் பாசிச பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்து எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்ட நிலையில், இந்தியா கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு பெருகியுள்ளது. தொடர்ந்து மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு இருப்பதால் பாஜக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறது. வாக்குப்பதிவின்போது வட மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கள்ள ஓட்டு போடுவது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்தது. தென் இந்தியாவோடு, வட இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக களமிறங்கியது கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. இந்த சூழலில் இன்றுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக கொடுத்தவை போலவே தெரிகிறது.

ஏனெனில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட NewsX, NDTV, ரிபப்ளிக், India News உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு சாதகமாக வெளியிட்டுள்ளது.குறிப்பாக NewsX, NDTV, India News நிறுவனம் சொல்லி வைத்ததுபோல் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தற்போது இது பாஜக கொடுத்த கருத்துக்கணிப்பு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதே டெய்லர், அதே வாடகை என்று கூறுவது போல் ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது தற்போது மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி பயத்தில் இருக்கு பாஜக ஏற்கனவே பல விஷயங்களை செய்து வரும் நிலையில், தற்போது கருத்துக்கணிப்புகளையும் தயாரித்து கொடுத்துள்ளது.

மேலும் 543 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 272 இடங்களில் வேற்றி பெறுவது அவசியம். ஆனால் இந்த முறை அனைத்து கருத்துக்கணிப்புகளுமே பாஜகவுக்கு 350-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று கூறுவது அனைவர் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Also Read: “உண்மையை சொல்ல வேண்டும்; மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது” - ஊடகங்களுக்கு கார்கே வலியுறுத்தல்!