Election 2024
”சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள்” : கே.சிவேணுகோபால்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. மேலும் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்துள்ளதால் இந்த தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள கே.சி.வேணுகோபால், " இந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
வட இந்தியாவில், ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லி, பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். இங்கும் பா.ஜ.க தோல்வியடையும்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பா.ஜ.கவிற்கு ஆதரவாக வேலை செய்கின்றன. இந்த அமைப்புகளை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர்.
மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலை வகிக்க தவறிவிட்டது. பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சு மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்ட வருகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!