Election 2024

“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. நாளை (மே 20) 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 5-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் மக்களின் வரவேற்பு இந்தியா கூட்டணிக்கு அதிகளவு இருப்பதை காண முடிகிறது.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை கவிழ்க்க மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். பாஜகவின் போலி வாக்குகளை மக்கள் நம்பப்போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான அரசையே பாஜக நடத்தி வந்தது. இதனை உணர்ந்த மக்கள் தற்போது தங்கள் ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களின் வாக்கு இந்தியா கூட்டணிக்கு உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக செய்தியாளரை சந்தித்த பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது :-

இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெரும்.

* இந்த தேர்தல் பொய்களுக்கு எதிரான உண்மையின் வெற்றிக்கானது.

* இந்த தேர்தல் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றிக்கானது

* இந்த தேர்தல் யதார்த்தத்துக்கானது, சொல்லாட்சி அல்ல

* இந்த தேர்தல் உலக பிரச்னைகளுக்கானது அல்ல, நம் நாட்டுக்கானது.

* இந்த தேர்தல் சாமானிய மக்களுக்கானது, உயர் வகுப்பினருக்கானது அல்ல

* இந்த தேர்தல் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கக் கூடியதற்கானது

* இந்த தேர்தல் முன்னேற்றத்துக்கானது, முட்டாள்தனத்திற்கானது அல்ல

அரசியல் சாசனத்தை மாற்றுவது போன்ற பாஜகவின் மோசமான எண்ணங்களில் இருந்து, வேலைவாய்ப்புகள், அரசியல் சாசனம், இடஒதுக்கீடு, ஜனநாயகம் ஆகியவற்றைக் காப்பாற்றும் உள்ளிட்ட அனைத்தையும் பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்கான தேர்தல் இது.

இந்த தேர்தல் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் பாதுகாப்பு, தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கானது. இதனை மக்கள் புரிந்துகொண்டு வருகின்றனர்." என்றார்.

Also Read: பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !