Election 2024

”பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் நரேந்திர மோடி” : ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி ஆவேச பேச்சு!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி," இந்து - முஸ்லீம் பிரிவினையை பற்றி பேசிய பிரதமர் மோடி அடுத்தநாளே, தனது கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். இந்து - முஸ்லீம் பிரிவினை பிரச்சனையை எழுப்பினால் உண்மையிலேயே நாட்டின் பிரதமராக இருக்க மோடி தகுதியற்றவர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷீர் வரை 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மக்களை சந்தித்து பிரச்சனைகளை அவர்களிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி. ஆனால் பிரதமர் மோடி எந்த மக்களை சந்தித்தார்?.

மதத்தின் பெயரால் வாக்குகளை பெற நினைக்கும் கட்சிகளை புறக்கணித்து, வேலைவாய்பு குறித்து பேசும் அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 10 ஆண்டுகளில் சில கோடீஸ்வரர்களுக்கு மட்டும் மோடி அரசு சேவை செய்துள்ளது. ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் ரூ.50 ஆயிரம் கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு மருத்துவிட்டது. அரசு துறைகளில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்தி கொடுக்கும் அரசாங்கத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!