Election 2024
”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து x சமூகவலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைத்ததாக பாஜக கூறியது.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதத்திற்கும் ஊடுருவலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பாஜக தெரிவித்தது. தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறும் பாஜக. காஷ்மீரின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏன் வேட்பாளர்கள் நிறுத்தவில்லை? " என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!