Election 2024
நாடாளுமன்ற தேர்தல் - பொதுமேடையில் விவாதம் நடத்த ராகுல் காந்தி,மோடிக்கு பத்திரிகையாளர் என்.ராம் அழைப்பு!
18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டம் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதை மையமாகவைத்துத்தான் பா.ஜ.க கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உரைகள் அமைந்து வருகிறது.
இந்நிலையில், பொது மேடையில் விவாதம் நடத்தப் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஆகிய மூன்று பேர் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:-
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏற்கனவே அதன் நடுப்பகுதியை எட்டியுள்ளது. பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு, சட்டப்பிரிவு 370, தொகுதி மறுவரையறை தொடர்பான பேசி வருகிறார்கள். மேலும் ஒருவரை மாறி ஒருவர் சவால் விடுத்து வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அரசியலமைப்பு சட்டம், தேர்தல் பத்திரம், சீனா ஆக்கிரம்பி ஆகியவைகுறித்து பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பி சவால் விடுத்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் பொது மேடையில் விரிவான விவாதத்தை நடத்தினால் பொதுமக்களும் உங்களது கருத்துக்களை நன்கு அறிந்து கொள்வார்கள். இதன் மூலம் உங்களது கருத்துக்களையும் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது நமது ஜனநாயகத்தை பெரிதும் வலுப்படுத்தும். எங்களின் இந்த கோரிக்கையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!