Election 2024
கள்ள ஓட்டு போட்ட பாஜக நிர்வாகியின் மகன்... குஜராத்தில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு - நடந்தது என்ன?
நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 கட்டங்கள் நிறைவடைந்து விட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு இன்னும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த மே 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 93 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் விதிகளை மீறி பாஜகவினர் பலரும் செயல்பட்டனர். உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், அவர்களை வாக்களிக்க விடாமல் வாக்காளர் அடையாள அட்டையை பிடுங்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்து, இஸ்லாமிய வாக்காளர்கள் மீது தடியடி நடத்தினர். இப்படி பல சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், வாக்குப்பதிவின்போது, பாஜக நிர்வாகியின் மகன், கள்ள ஓட்டு போட்டது தொடர்பான வீடியோவை நேரலையாக வெளியிட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் குஜராத்தில் தாஹோத் தொகுதியின் பர்த்தம்பூர் பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின்போது, பாஜக நிர்வாகி, அந்த வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள், மக்களை மிரட்டி தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மக்களை விரட்டி அவர்களுக்கு பதிலாக, பாஜக நிர்வாகியின் மகன் விஜய் பபோர் கள்ள ஓட்டு போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவையும் அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் லைவாக பதிவேற்றியுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இந்த வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகியின் மகன் மற்றும் ஒருவர் என மொத்தம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் அரங்கேறிய தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மறு வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 11) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1788488334773272953இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதையடுத்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தனது சிறு வயது மகனை வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று, அவரை தாமரை பொறித்த (பாஜக) சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளார். இதனையும் வீடியோவாக அவரே பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!