Election 2024
“வெயிலா... ஒரு வெங்காயம் வச்சுக்கோங்க...” - ஒன்றிய அமைச்சரின் பேச்சுக் குறித்து இணையவாசிகள் கிண்டல் !
நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 கட்டங்கள் நிறைவடைந்து விட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு இன்னும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், வாக்கு செலுத்துவதில் மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதால் தேர்தலில் மக்களால் வாக்கு செலுத்த முடியாமல் உள்ளதாக பல்வேறு செய்திகள் வெளியானது. எனினும் இதனை பெரிதாக பொருட்படுத்தாமல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டு விமர்சித்து வந்தது.
இதன் எதிரொலியாக மக்கள் வாக்கு செலுத்த முன்வராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த ஆண்டு (2024) மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அனைத்து பகுதிகளிலும் குறைந்தே காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், ஒரு சில தொகுதிகளில் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரு வெங்காயம் வைத்துக்கொண்டால் வெயில் பற்றி கவலை வேண்டாம் என ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளது அனைவர் மத்தியிலும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியின் பாஜக சார்பில் ஜோதிராதித்யா சிந்தியா போட்டியிடுகிறார். இவர் தற்போது பாஜக அரசின் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் குணா தொகுதிக்கு கடந்த மே 7-ல் (நேற்றைய முந்தைய நாள்) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஜோதிராதித்யா சிந்தியா வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். அப்போது அங்கிருந்த ஊடகவியலாளர் அவரிடம் பேட்டி எடுத்தார். அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் குறித்து பத்திரிகையாளர் ஜோதிராதித்யா சிந்தியாவிடம் கேள்விகேட்டார்.
அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா, “உங்கள் பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக் கொண்டால் போதும்... இனி வெயில் குறித்து கவலைப் பட வேண்டாம்” என்று கூறியுள்ளார். மேலும் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு வெங்காயத்தையும் எடுத்துக்காட்டினார்.
ஒன்றிய அமைச்சரின் பேச்சு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!