Election 2024
"அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி MP குற்றச்சாட்டு!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் இன்று 93 தொகுதிகளில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்புணர்வைப் பா.ஜ.க ஊட்டிவருகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அதில், இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் பயங்கரமான பாகுபாடுகளைச் சந்தித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.கவின் நோக்கத்தால்தான் இந்த சூழல் உருவாகியுள்ளது. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்வை பா.ஜ.க ஊக்குவித்து வருகிறது. ஆனால் அனைவரின் முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் போராடுகிறது.
அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகக் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் வாக்களியுங்கள். ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!