Election 2024
குஜராத், உத்தர பிரதேசத்தில் தேர்தல் விதிகளை மீறிய பாஜக : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் இன்று 93 தொகுதிகளில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் குஜராத் மாநிலத்தில் பல வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க முகவர்கள் தாமரை சின்னம் மற்றும் தலைவர்களின் முகம் பொறித்த பேனாக்களுடன் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் விதி மீறலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் அவர்களை அனுமதித்துள்ளது.
இதை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சக்தி சிங் கோஹில், சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, பா.ஜ.கவுக்கு ஒரு சட்டம்? காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எத்தனை தில்லு முள்ளு செய்தாலும் இந்தமுறை பா.ஜ.கவுக்கு குஜராத் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து தடியடி நடத்தியுள்ளது யோகி போலிஸ். உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். எனவே அங்கிருக்கும் அவர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கு அப்பகுதி போலீசார் மறுத்துத் தடுத்து அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அதோடு வாக்காளர்களின் வாக்கு அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை தட்டிக் கேட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியா உர் ரஹ்மானை போலீசார் தாக்கி அழைத்து சென்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் போலீசாரின் இந்த செயல் தற்போது கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அக்கிரமத்தைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், பாஜக பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பா.ஜ.கவின் தேர்தல் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் வேடிக்கைபார்த்து வருகிறது. இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணையத்திற்குக் கேள்வி எழுப்பினாலும், அங்கு இருந்து வரும் ஒரே பதில் மவுனமாக மட்டுமே இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!