Election 2024

பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது 2 கட்டங்கள் முடிந்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெற்று ஜூன் 1-ம் தேதி நிறைவடைக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனினும் பாஜகவும், மோடியும் வழக்கம்போல் தங்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். அதன்படி மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் கான்பூர் வேட்பாளர் ரமேஷ் அவஸ்தியை ஆதரித்து நேற்று மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக ஆதரவாளர்கள் சுற்றிலும் நிற்க, மோடி தாமரை பொறித்த சின்னத்தை காட்டியவாறே வாக்கு சேகரித்தார். அவருடன் ரமேஷ் அவஸ்தியும் இருந்தார். அப்போது அந்த தாமரை சின்னதை, அங்கிருந்த தொண்டர்களிடம் காண்பித்து வாக்குசேகரித்தபோது மோடியின் முகத்தை மறைக்கும் சூழல் ஏற்பட்டது.

மோடியின் முகத்தை தாமரை சின்னதை வைத்து மறைத்ததால், கோபமடைந்த மோடி, உடனே முகத்தின் முன் இருந்த அவரது கையை நகர்த்தி அறிவுரை வழங்கினார். மேலும் அந்த தாமரை சின்னதை தொண்டர்களிடம் இப்படித்தான் கான்பிக்க வேண்டும் என்றும், தன் முகத்தை மறைத்து காண்பிக்க கூடாது என்றும் பேசுவது போன்ற தொனியில் மோடி செய்கை செய்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அரசியல் தலைவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. மேலும் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியையும் கேமராவையும் ஒருபோதும் யாராலும் பிரிக்க முடியாது " என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.

தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மோடி ஒவ்வொரு முறையும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருவதற்கு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த நிகழ்வுக்கு இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !