Election 2024
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட தேர்தலுக்காக NDA மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக, பாரதிய ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்போது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்), அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதாவது கடந்த ஏப்.5-ம் தேதி தெலங்கானாவின் ரஞ்சன்னா சிர்சில்லா என்ற பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் குறித்து கே.சி.ஆர் அவதூறாக பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து ரஞ்சன்னா சிர்சில்லா மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்க கே.சி.ஆருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி கே.சி.ஆர், ஏப்.18-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு விளக்கம் அளிக்காத பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள் காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கக்கூடாது என்றும் ஊடகங்களில் (சமூக ஊடகங்கள்) பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?