Election 2024
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சி பாஜக கூட்டணியுடன் போட்டியிடுகிறது. இங்கு ஹாசன் தொகுதியின் JDS கட்சி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்.26-ம் தேதி தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதனிடைய இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே, சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியதோடு, மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் பெரிதான நிலையில், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் இவர் வெளிநாடு தப்பி சென்றுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று JDS கூட்டணி கட்சியான பாஜகவும் அறிவித்துள்ளது அரசியல் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரஜ்வல் மீது போலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கட்சியில் இருந்து மட்டுமின்றி தேர்தலில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற JDS கட்சியின் செயற்குழு கூட்டத்தில், பிரஜ்வலை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பை வெளியிட்டது அக்கட்சி. இப்படி இந்த விவகாரம் அம்மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரஜ்வல் தொடர்பான ஆபாச வீடியோவை பாஜக நிர்வாகியிடம் கொடுத்ததாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்தவர் கார்த்திக்.
இவர் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த 15 ஆண்டுகாலமாக பிரஜ்வல் குடும்பத்தின் கார் ஓட்டுநராக இருந்து வந்தேன். ஆனால் ஓராண்டுக்கு முன்புதான் எனது வேலையை விட்டுவிட்டேன். பிரஜ்வல் ரேவண்ணா தரப்பினர், எனது நிலத்தை பறிப்பதற்கு முயற்சி செய்தனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது எனது மனைவியை தாக்கி சித்தரவை செய்தனர். அதனால் நானும் எழுதி கொடுத்துவிட்டேன்.
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோக்கள் தொடர்பான பென் டிரைவை, பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் கொடுத்தேன். தற்போது இதுகுறித்து விசாரணை குழு முன் ஆஜராகி முழு விவரத்தை தெரிவிக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரின் ஆபாச வீடியோக்களை, பாஜக நிர்வாகியே வெளியிட்டு வைரலாக்கியுள்ளது பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!