Election 2024

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் காலையிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகிறார்கள்.

காலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை SIET கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அதேபேோல் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பிராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையில், சென்னை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றி இருக்கிறேன். தற்போது வரை 18% வாக்கு பதிவாகி இருக்கிறது. மாலை 6 மணி வரை நேரம் உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்குகள்தான் மருந்து” : ராகுல் காந்தி!