Election 2024

மக்களவைத் தேர்தல் - வாக்களிக்க உதவும் 13 அடையாள ஆவணங்கள் எவை?

தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறையாக வாக்களிப்போர் 10.92 லட்சம் பேர். நாளை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்க 68,321 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண் வேட்பாளர்கள். 76 பெண் வேட்பாளர்கள். வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

அதன் விவவரம் வருமாறு:-

1. ஆதார் அட்டை

2.ரேஷன் அட்டை

3. மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட அட்டை

4. பாஸ்போர்ட்

5. வங்கி, அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம்.

6.ஓய்வூதிய அட்டை

7.மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை

8.ஒன்றிய, மாநில அரசுகள் PSU நிறுவன அடையாள அட்டை

9.ஓட்டுநர் உரிமம்

10.எம்.பி, எம்.எல்.ஏ அடையாள அட்டை

11.பான் கார்டு

12.மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம் ஆகும். அப்போதுதான் வாக்களிக்க முடியும்.

Also Read: தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் : முழுவிவரம்!