Election 2024
மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி சென்னையில் வாக்கு சேகரித்த முதல்வர் :வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதற்கட்டமாக 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு, 1 தொகுதியை கொண்ட புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதிவாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்பதும் நாமதே நாடும் நமதே என்ற முழக்கங்களோடு திமுக தலைமையிலான கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் இன்னும் 3 நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலையோடு தேர்தல் பரப்புரை நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட சென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, முதல்வரின் சீதனம் ரூ.1000-க்கு நன்றி என இல்லத்தரசிகள் முதலமைச்சரிடம் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் வழிநெடுகிலும் மிகுந்த வரவேற்பளித்தனர். மக்கள் உற்சாக வரவேற்பில் திறந்த வெளி வாகனத்தில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!