Election 2024
ம.பி-யில் பிரதமர் மோடி Road Show-ல் ஏற்பட்ட திடீர் விபத்து... பெண் உள்பட 7 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி, Road Show மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் Road Show மேற்கொண்ட பல்வேறு சர்ச்சைகளில் பாஜக சிக்கியது. இந்த சூழலில் நேற்று மத்திய பிரதேசத்தில் மோடி Road Show மேற்கொண்ட நேரத்தில் திடீரென மேடை சரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் தொகுதியில் பிரதமர் மோடி நேற்று இரவு Road Show மேற்கொண்டார். அந்த சமயத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்...' என்றும், '400 இடங்களில் வெற்றி பெறுவோம்...' என்றும் முழக்கமிட்டே சென்று கொண்டிருந்தார். அவர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பிறகு, அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை சட்டென்று சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அங்கிருந்த 1 காவல் அதிகாரி, பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 3 பெண்களுக்கும், காவல் அதிகாரிக்கும் கால், கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோடி ரோட் ஷோ நேரத்தில் இது போன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது, பாஜகவினரின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்த நிகழ்வுக்கு பலரும் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!