Election 2024
“பாஜகவுக்கு சரியான பாடத்தை கற்றுத் தர வேண்டும்” : தூத்துக்குடி பரப்புரையில் கனிமொழி எம்.பி. ஆவேசம்!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சார கூட்டத்தில் கனிமொழி பேசியது, இந்திய நாட்டை பாசிசத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்க உதித்து இருக்கக்கூடிய சூரியன் திராவிட நாயகன், நம்முடைய முதலமைச்சர். சில மாதங்களுக்கு முன்னால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் எல்லாம் இந்த கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒன்றிய அரசு கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், நான் இருக்கிறேன் உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு என்று கருணையோடு ஓடிவந்தது நம்முடைய முதலமைச்சர் தான்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் எந்த பகுதியிலிருந்தாலும் நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். வீடு இடிந்தவர்களுக்கு, இந்தியச் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு 4 லட்சம் ரூபாய் வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு, நம்முடைய முதலமைச்சர்.
அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளாக இருக்கட்டும், ஆடு மாடுகளை இழந்தவர்களாக இருக்கட்டும், மாணவர்களாக இருக்கட்டும், வியாபாரிகளாக இருக்கட்டும் அத்தனை பேருக்கும் உதவிக்கரம் நீட்டுவது நம்முடைய முதலமைச்சர். இங்கே ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கக் கூடிய பிரதமர் தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியும் கொடுக்கவில்லை, நமக்கு வரவேண்டிய நிதியையும் தருவதில்லை. நம்ம கிட்ட இருந்து வாங்குகின்ற வரியைக் கால்வாசி கூட திருப்பி கொடுக்கவில்லை.
1 ரூபாய் வாங்கினால் 26 பைசா தான். ஆனால் உத்தரப்பிரதேச அரசுக்கு 2 ரூபாய் 2 பைசா, இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர வஞ்சனை செய்து கொண்டிருக்கக் கூடிய பாஜகவுக்கு, அவர்களோடு இத்தனை ஆண்டுகளாக அவர்கள் எடுத்த மக்களுக்கு விரோதமான, சிறுபான்மை விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கக்கூடிய அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்து இன்று பிரிந்து விட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்கக்கூடிய அதிமுக இரண்டு பேருக்கும் நாம் நல்ல பாடத்தைச் சொல்லித் தரக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை உணர்ந்து கொண்டு இந்தத் தேர்தலிலே நாம் பணியாற்ற வேண்டும்.
ஒன்றே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடி என்ன சொன்னார். 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது இந்தியா உலகத்திலேயே பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் முன்னேறிய நாடாக இருக்கும் என்றார், அவருடைய சாதனை என்ன என்றால், இன்றைக்கு இந்தியா பசி குறியீடு, உலக பசி குறியீடு (Global hunger index) அதில் பார்த்தால் 111வது இடம். தமக்கு மேலே நேபால், பங்களாதேஷ், பாகிஸ்தான் இருக்கிறது. இது தான் அவர்கள் செய்திருக்கக்கூடிய சாதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நம்முடைய முதலமைச்சர். இங்கே பசி என்பது கிடையாது. தமிழ்நாட்டில் காலையில் பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் கூட பசியோடு இருந்துவிடக்கூடாது என்பதற்காகக் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கி வழங்கி இருக்கக்கூடிய வள்ளல் நம்முடைய முதலமைச்சர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி யாரும் பசியோடு உறங்கச் செல்லக்கூடாது, யாரும் பசியோடு இருக்கக் கூடாது, மாணவர்கள் உயர வேண்டும், படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
பசி என்பதைப் பற்றி கவலை கிடையாது. யார் பட்டினி கிடந்தாலும் கவலை கிடையாது. எங்களுடைய அரசியல் எங்களுடைய மத, அரசியல் அது மட்டும் தான். எங்களுக்கு முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய பாஜகவுக்கு, மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்துக் கூடிய பாஜகவுக்கு, இந்த தேர்தலில் நாம் ஒரு சரியான பாடத்தை கற்றுத் தர வேண்டும்.
இந்த நேரத்திலே மீண்டும் முதலமைச்சர் அவர்களுக்கு நான் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தூத்துக்குடிக்கு எப்பொழுதுமே ஒரு அன்போடு நாங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை எல்லாம் நிறைவேற்றித் தரக்கூடிய நம்முடைய முதலமைச்சர். சமீபத்தில் வின்பாஸ்ட என்ற மிகப்பெரிய கார் நிறுவனத்தை தூத்துக்குடி மக்களுக்காக வழங்கி இருக்கிறார்கள்.
அந்த நிறுவனம் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மட்டுமல்ல, ராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் இதுதான் நம்முடைய முதல்வர் ஆட்சி இளைஞர்களுடைய எதிர்காலத்தை உருவாக்கிக் காட்டக்கூடிய மேம்படுத்தக்கூடிய ஆட்சி அந்த முதலமைச்சர் அவர்களுடைய வேட்பாளராக நின்று உங்களிடம், உங்களுடைய பொன்னான வாக்குகளை உங்களுடைய உயர்ந்த வாத்துகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும் என்று பேசினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?