Election 2024
நாடாளுமன்ற தேர்தல் : “2 முக்கிய மாநிலங்களில் போட்டியில் இருந்து பின்வாங்கிய பாஜக..” - காரணம் என்ன ?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்தியா கூட்டணி மற்றும் NDA கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வட கிழக்கில் உள்ள 2 மாநிலங்களில் பாஜக நேரடியாக களத்தில் இறங்கவில்லை என்று அறிவித்துள்ளது. அதாவது வட கிழக்கில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன.
இதில் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. இந்த சூழலில் கடந்த ஆண்டு (2023) மே மாதம் தொடங்கிய மணிப்பூர் கலவரம் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், இந்த நிமிடம் வரை அங்கிருக்கும் மக்களை பிரதமர் மோடி நேரில் சந்திக்கவில்லை. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடே கண்டனம் தெரிவித்த நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் பொதுமக்கள் பாஜக ஆட்சியில் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மேலும் அம்மாநிலங்களின் மக்கள் பாஜகவுக்கு எதிராகவும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கிருக்கும் 2 மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது.
மேகாலயா, நாகாலாந்து ஆகிய 2 மாநிலங்களில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் அம்மாநிலங்களில் NDA ஆளுங்கட்சிகளுக்கு பாஜக ஆதரவை தெரிவிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில் ஒன்றில் பாஜகவும், மற்றொன்றில் கூட்டணி கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளிலும், மிசோரமில் 1 உள்ள தொகுதியிலும் போட்டியிடுகிறது. மணிப்பூர் கலவரத்தில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாக பாஜக அரசு தெரிவித்துள்ள நிலையில், அரசுக்கு தெரியாமல் எவ்வளவு உயிர் பலி நிகழ்ந்துள்ளது என்பது தெரியவரவில்லை. மேலும் இந்த மணிப்பூர் கலவரத்தில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, 2 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது தொடர்பான வீடியோவும் வைரலானது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கண்டனங்களை எழுப்பியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் வாய் திறக்காமல் இருந்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல நாட்களுக்கு பிறகு இதுகுறித்து வாயை திறந்த மோடி, மணிப்பூர் அமைதி நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக வழக்கம்போல் தன் வாய் தன் உருட்டு என்று பேசினார். இருப்பினும் தற்போது வரை மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!