Election 2024
நாடாளுமன்ற தேர்தல் 2024: கோவை, சேலம் உள்ளிட்ட 8 மேற்கு மாவட்டங்களுக்கான திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கான பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.
அதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்த பட்டியலில் கோவை, சேலம் உள்ளிட்ட 08 மேற்கு மாவட்டங்களுக்கான அறிவிப்பு பின்வருமாறு :
=> கோவை
1. தமிழ்நாடு வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
2. பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு GI Tag கொண்டுவரப்படும். பொள்ளாச்சியில் COLD STORAGE மையம் அமைக்கப்படும்.
3. பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைக்கப்படும்.
4. சேரன் விரைவு ரயில் சேவை பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்படும்.
5. கோவை மெட்ரோ ரயில் திட்ட சேவையைத் திருப்பூர் வரை நீட்டிக்க வழிவகை செய்யப்படும்.
6. மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம்- ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
=> சேலம்
1. சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பன்னாட்டு விமான நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும்.
2. சேலத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தொழில்பூங்கா அமைக்கப்படும்.
3. சேலம் மாவட்டத்தில் ஜவுளி, ஜவ்வரிசி, நார் கயிறு, கொலுசு, விவசாயம் என பல துறைகளில் உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. எனவே, அங்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
=> தர்மபுரி
மொரப்பூர் ரயில் நிலையத்தையும் தர்மபுரி ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும்.
=> ஈரோடு
1. ஈரோடு ரயில் நிலையம் முதல் காங்கேயம், தாராபுரம், பழனி ரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றிய அரசின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஆவன செய்யப்படும்.
=> நீலகிரி
1. நீலகிரி மாவட்டத்தில் முக்கியப் பொருளாதாரமான சிறு தேயிலை விவசாயிகளின் பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூபாய் 35 ஆக நிர்ணயிக்கப்படும்.
2. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மேம்படுத்தப்படும்.
=> கிருஷ்ணகிரி
1. வளர்ந்துவரும் தொழில் நகரமான ஓசூர் நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
2. தமிழ்நாடு நுழைவாயில் ஜுஜுவாடி முதல் சிப்காட் 2 வரை பறக்கும் சாலைப் பாலம் அமைக்கப்படும்.
=> திருப்பூர்
மக்காச்சோளம், சோயா போன்ற ஏராளமான விவசாயப் பொருள்கள் இந்திய இரயில்வே - சரக்கு வண்டிகள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க கட்டணச் சலுகைகளை வழங்கிடப் பரிந்துரைக்கப்படும்.
=> நாமக்கல்
1. ஈரோடு மாவட்ட பாசூரையும் நாமக்கல் மாவட்ட சோழிராமணியையும் இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
2. நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!