Election 2024

பெங்களூரு கஃபே : “தமிழர்தான் வெடிகுண்டு வைத்தார்” - ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தது.

எனினும் குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழர்கள்தான் வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளது தற்போது கண்டனங்களை வலுத்துள்ளது.

Shoba

பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா (Shobha Karandlaje) இந்த நிகழ்வு குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான்” என்று பேசினார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில், எந்த வித ஆதரமுமின்றி வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசிய ஒன்றிய இணையமைச்சருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. வெறுப்புணர்வை விதைக்கும் பாஜக, தற்போது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே சண்டை மூட்ட முயல்கிறது. இது போன்ற செயலை உடனே கைவிட வேண்டும் என்றும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “ பிரதமர், அவர் தகுதிக்கு ஏற்ப பேசுகிறாரா?” - மோடியின் பேச்சை பட்டியலிட்டு டி.ஆர்.பாலு எம்.பி. பதிலடி !