DMK
4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தி.மு.க: வேலூர், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர்கள்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் 4வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தன.
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.
தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலான இடங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தி.மு.க போட்டியிடும் வார்டுகளுக்கான முதற்கட்ட, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் வடக்கு பகுதி, ஆலந்தூர் தெற்கு பகுதி போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களும், செங்கல்பட்டு, மறைமலைநகர், குன்றத்தூர், மாங்காடு, நத்திவரம் - கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்பெரும்புதூர் ஆகியே பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், உரையூர், தில்லைநகர், காஜாமலை, கிராப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், இலால்குடி, பூவாளூர், கல்லுக்குடி, புள்ளம்பாடி, சிறுகமணி, துவாக்குடி, மணப்பாறை, பொன்னம்பாடி, கூத்தைப்பார், துறையூர், முசிறி ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம், உப்பிலியபுரம், தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலகிருஷ்ணாம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, ச.கண்ணணூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி நகராட்சிக்கும், செங்கம், புதுப்பாளையம், வேட்டவளம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், தேசூர், பெரணமல்லூர்,போளூர், களம்பூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சிகளுக்கும், இலஞ்சி மேலகரம், ஆலங்குளம், குற்றாலம், கீழப்பாவூர், திருவேங்கடம், ஆழ்வார்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், வடக்கனந்தல் பேரூட்சிகளுக்கும், சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மாநகராட்சி, கண்ணங்குறிச்சி, கடுருப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கும், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி, ஆலங்காயம் பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாநகராட்சி, குளித்தலை, புகழூர், பள்ளப்பட்டி நகராட்சிகளுக்கும், அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கவரம் பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட இராசிபுரம், நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் தெற்கு நகராட்சிகளுக்கும், இரா.புதுப்பட்டி, அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பட்டணம், வெண்ணந்தூர், சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பிள்ளாநல்லூர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், பர்கூர், ஊத்தங்கரை, நாகரசம்பட்டி, காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓசூர் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?