DMK
“ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ... திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணா” : மு.க.ஸ்டாலின் புகழாரம்!
பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் சென்று, அங்குள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் மற்றும் அதற்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சருடன் அமைசர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, மா. சுப்பிரமணியன், மற்றும் கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் தி.மு.கவினரும், பொதுமக்களும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்